Kerala: Government Launches A Rs 900 Crore Scheme To Help Students Repay Loans

 

கேரள முதல்வர் பினராயி விஜயன்

கேரள மாநிலத்தில் கல்விக்கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல் அவதிப்படும் மாணவர்களுக்கு உதவும் வகையில், அவற்றில் பெரும் பகுதியைத் தானே ஏற்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

 

இந்தத் திட்டத்தை ஏப்ரல்1ல் இருந்தே முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இதற்காக ரூ900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கேரள மாநில சட்டப்பேரவையின் 60ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டதை ஒட்டி நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றிய பினராயி விஜயன் இதனைத் தெரிவித்துள்ளார். இது கடன் தள்ளுபடி திட்டம் அன்று எனவும், கல்விக்கடன் பெற்று 4 ஆண்டுகளுக்குப் பிறகு அதனைத் திருப்பிச் செலுத்த முடியாத பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் உதவும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படும் நடவடிக்கை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். இந்தத் திட்டத்தின் படி, கல்விக் கடனின் 50 சதவீதம் முதல் 90 சதவீதம் தொகையை அரசே ஏற்கும் என அவர் அறிவித்துள்ளார். ஆண்டு வாரியாகவும், கடனின் தன்மை, வாங்கியவரின் நிலை என பல்வேறு அம்சங்களைக் கவனத்தில் கொண்டு, வட்டித் தள்ளுபடி உட்பட கணக்கிடப்பட்டு இந்த உதவி வழங்கப்படும் எனத் தெரிகிறது.  ரூ 4 லட்சம் முதல் 9 லட்சம் வரையிலான கல்விக் கடன்களுக்கு இந்த உதவி வழங்கப்படும் என முதல்வரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட ரூ.9 ஆயிரத்து 586 கோடி வாராக்கடனாக நிலுவையில் இருப்பதாக வங்கிகளின் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.