திருவனந்தபுரம்

கொரோனா வைரஸ் பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ள கேரள மாநிலத்துக்கு மத்திய அரசு  வெறும் ரூ.157 கோடி நிதி அளித்துள்ளது.

நாடெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்த மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.  அதற்கு அடுத்தபடியாக கேரள மாநிலம் உள்ளது.   இந்தியாவின் முதல் கொரோனா நோயாளி கேரள மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ளார்.

கொரோனா நிவாரண நிதியாக மகாராஷ்டிர மாநிலத்துக்கு ரூ.1611 கோடி நிதி அளித்த  மத்திய அரசு கேரளாவுக்கு வெறும் ரூ. 157 கோடி நிதி மட்டுமே அளித்துள்ளது.  அதே வேளையில் மிகவும் குறைவான பாதிப்பு எண்ணிக்கை உள்ள வட இந்திய மாநிலங்களுக்குக் கேரளாவை விட அதிகம் நிதி அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று நிதி அமைச்சர் நேற்று ரூ.17,287 கோடி மதிப்பிலான நிவாரணத்தை கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு அறிவித்தார்.  இதில் ரூ. 11,092 கோடி அனைத்து மாநில பிஏரிடர் நிவாரண நிதிக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ரூ.6195கோடி ஆந்திர,அ அசாம், இமாச்சலப்பிரதேசம், கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், சிக்கிம், தமிழ்நாடு, திரிபுரா உத்தரகாண்ட், மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன.

ரூ.11,092 கோடியில் மகாராஷ்டிராவுக்கு ரூ.1611 கோடி, உத்தரப்பிரதேசத்துக்கு ரு.966 கோடி, மத்தியப்பிரதேசத்துக்கு ரூ.910 கோடி, பீகாருக்கு ரு.708 கோடி, ஒரிசாவுக்கு ரூ. 802 கோடி , ராஜஸ்தானுக்கு ரூ.740.50 கோடி, மேற்கு வங்கத்துக்கு ரூ.505.50 கோடி என முன்பணம் வழங்கப்பட்டுள்ளது.