திருவனந்தபுரம்: 2020ம் ஆண்டு கேரளாவை உலுக்கிய தங்கக்கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ்-க்க்கு கேரள உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது. உபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட அவருக்கு 14 மாதங்களுக்கு பிறகு ஜாமின் கிடைத்துள்ளது.

கேரள மாநிலத்தில் செயல்பட்டு வந்த வெளிநாட்டு தூதரகம் பெயரில் தங்கம் கடத்தப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கடத்தல் செயலில் ஈடுபட்டவர்களில் பலர் கேரள மாநிலஅரசின் தலைமைச் செயலகத்தில் பணியாற்றியவர்கள் என்பதும்,  மாநில ஐடி துறை செயலாளராக இருந்த ஸ்வப்னா சுரேஷ், மற்றும் கேரள முதல்வரின் தனிச்செயலாளர் சிவசங்கரன் என்பதும் தெரிய வந்தது. இந்த வழக்கில் சிவசங்கரன், ஸ்வப்னா சுரேஷ் உள்பட 20 பேரை என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை கைது செய்து, விசாரணை நடத்திவந்தது. இதையடுத்து அவர்கள்மீது உபா சட்டமும் பாய்ந்தது.

மேலும் விசாரணையில், ஸ்வப்னா சுரேத் மற்றும் சரித் ஆகியோர் ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்தின் முன்னாள் ஊழியர்கள் மற்றும் அவர்கள் தங்களது கடந்தகால தொடர்பை பயன்படுத்தி இந்த முறைகேட்டில் ஈடுபட்டு, தங்கத்தை கடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில், குற்றவாளிகள் தரப்பில் ஜாமின் கோரிய விசாரண நடைபெற்று வந்தது. இன்றைய விசாரணையைத் தொடர்ந்து, முக்கிய மற்றும் முன்மை குற்றவாளியான  ஸ்வப்னா சுரேஷ்க்கு கேரள உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. ரூ. 25 லட்சம் ஜாமீன் பத்திரம் மற்றும் 2 சால்வென்ட் ஜாமீனில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.