இந்த விவகாரம் கேரள மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மாநில அரசு பதவி விலக வேண்டும் என காங்கிரஸ், பாஜக கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இதற்கிடையில், தங்க கடத்தல் விவகாரம் என்ஐஏ அதிகாரிகள் பலரிடம் விசாரணையை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக சிவசங்கரிடம் ஏற்கனவே 2 முறை என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி உள்ள நிலையில், தற்போது 3வது முறையாகவும் விசாரணை நடத்தி உள்ளனர். கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் காலை 11.30 மணியில் இருந்து இரவு 8 மணி வரை டி.எஸ்.பி. ராதா கிருஷ்ணபிள்ளை தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
தங்கக்கடத்தல் விவகாரம் தொடர்பாக, கேரள அமைச்சர் ஜலீலிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தியதை தொடர்ந்து சிவசங்கரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.