டெல்லி:
கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் தீவிரமடைந்துள்ள நிலையில், மேலும் 6 மாதங்கள் சுற்றுலாவுக்கு தடை விதிப்பது கேரளா மற்றும் கோவா மாநில அரசுகள் யோசித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
வெளிநாடுகளில் இருந்து, இந்தியா வந்தவர்கள், வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பிய வர்கள் மூலமே கொரோனா பரவல் ஊடுருவியது கண்டறியப் பட்டது. இந்தியாவில் சுற்றுலா வுக்கு பெயர்போன மாநிலங்களின கேரளா மற்றும் கோவா மாநிலங்களில் சுற்றுலாவுக்கு மேலும் சில மாதங்கள் தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகளால், மீண்டும் கொரோனா தொற்று பரவிவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில், வரும் நவம்பர், டிசம்பர் மாதம் வரை சுற்றுலாவுக்கு தடை விதிப்பது குறித்து மத்தியஅரசுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது. இதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.