டில்லி

வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்துள்ளவர்களின் விசாக் காலம் ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட உள்ளது.

மாதிரி புகைப்படம்

வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்துள்ள பலர் தேசிய ஊரடங்கு காரணமாக அவரவர் நாடுகளுக்கு திரும்பிச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.   இவர்களில் பெரும்பாலோருக்கு விசாக் காலம் முடிவடைந்துள்ளதால் அவர்கள் சட்டப்படி இந்தியாவில் தங்க முடியாத நிலை உள்ளது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது

அந்த அறிவிப்பில், “வெளிநாடுகளில் இருந்து வந்து இந்தியாவில் தங்கி உள்ளவ்ரக்ளில் ஒரு சிலருக்கு விசா முடிவடைந்துள்ளது.  இவ்வாறு கடந்த பிர்பரவரி 1 முதல் இந்த மாதம் 30 வரை முடிவடையும் விசாக்கள் காலம் நீட்டிக்கப்படுகிறது.

இந்த கால கட்டத்தில் விசாக் காலம் முடிவுக்கு வரும் வெளிநாட்டினர்கள் இணையம் மூலம் விண்ணப்பித்து தங்கள் விசாக் காலத்தை ஏப்ரல் 30 வரை நீட்டித்துக் கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.