திருவனந்தபுரம்: கேரள மாநில நிதியமைச்சர் எம். தாமஸ் ஐசக்குக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுஉள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார்.
கேரளாவில் நேற்று ஒரே நாளில் 3,082 பேருக்கு உறுதியானது. புதிதாக 10 பேர் பலியாகினர். 2,196 பேர் குணமடைந்தனர். இதுவரை அங்கு 64,755 பேர் குணமாகி உள்ளனர். 22,676 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்த நிலையில், கேரள நிதியமைச்சர் ஐசக் தாமஸ் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு நேற்று மாலை ஆன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தாமஸ் ஐசக்கிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவரது அலுவலக ஊழியர்களும் ஆன்டிஜென் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் ஒருவருக்கும் தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, அமைச்சர் தனிமைப்படுத்திக்கொண்டிருப்பதாகவும், அவருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் அமைச்சரின் அலுவலகம் கிருமி நாசினி கொண்டு நாளை சுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
கேரள அமைச்சரவையில் அமைச்சர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.