திருவனந்தபுரம்: கேரளா கொரோனா தடுப்பு விதிமுறைகளை ஜூலை 2021 வரை நீட்டிக்கப்படுகிறது. முகமூடிகள், சமூகக் கூட்டங்களுக்கு ஒரு வருடம் தடை விதிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவல் சங்கிலியைக் குறைக்கவும், அதன் பரவலின் திறனைக் குறைக்கும் ஒரு முயற்சியாக, கேரளாவில் மாநில தொற்றுநோய்க் கட்டளைச் சட்டத்தில் திருத்தம் செய்து, ஓராண்டுக்கு மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமல்படுத்தப்படுகின்றன.
கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றுகள் படிப்படியாக அதிகரித்து வருவதால், தடுப்பு நடவடிக்கைகளாக செயல்பட மாநில அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. கேரள தொற்றுநோய் கொரோனா வைரஸ் நோய் கூடுதல் ஒழுங்குமுறைகள், 2020 என்றழைக்கப்படும் புதிய விதிமுறைகள் ஒரு வருடத்திற்கு அதாவது ஜூலை 2021 வரை அல்லது அரசாங்கத்தின் கூடுதல் உத்தரவு வரை அமலில் இருக்கும்.
அதன்படி, மக்கள் முகமூடி அணிய வேண்டும், சமூக தூரத்தை பராமரிக்க வேண்டும் மற்றும் ஜூலை 2021 வரை பெரிய கூட்டங்களைத் தவிர்க்க வேண்டும். விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2020ம் ஆண்டு கேரள தொற்று நோய்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் யார் விதிமுறைகளை மீறுகிறார்களோ அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விதிமுறைகளின் விவரம் வருமாறு:
- முகமூடி அணிவது
அனைத்து நபர்களும் அனைத்து பொது இடங்களிலும், பணியிடங்களிலும், பொதுமக்கள் அணுகக்கூடிய எந்த இடத்திலும், அனைத்து வகையான வாகனங்களிலும், போக்குவரத்தின் போதும் முகக்கவசத்துடன் தங்கள் வாய் மற்றும் மூக்கை மறைக்க வேண்டும்.
- சமூக விலகல்
அனைத்து பொது இடங்களிலும் செயல்பாடுகளிலும் நபருக்கு நபர் இடையே ஆறு அடி தூரத்தை அனைத்து நபர்களும் பராமரிக்க வேண்டும்.
- திருமணங்கள்
அனைத்து திருமண விழாக்களிலும் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக பங்கேற்பாளர்கள் 50ஐ தாண்டக்கூடாது.சானிடிசர், முகக்கவம் அணிந்து கொள்ள வேண்டும். மேலும் அவர்களுக்கு இடையே ஆறு அடி சமூக தூரத்தை பின்பற்ற வேண்டும்.
- இறுதிச் சடங்குகள்
இறுதிச் சடங்குகளில், ஒரு நேரத்தில் அதிகபட்ச பங்கேற்பாளர்கள் 20து நபர்களைத் தாண்டக்கூடாது. அவர்கள் அனைவரும் முகக்கவசம், சானிடிசர் பயன்படுத்த வேண்டும். அவர்களுக்கு இடையே ஆறு அடி சமூக தூரத்தை வைத்திருக்க வேண்டும். கொரோனா மரணம் என்று சந்தேகிக்கப்பட்டால், இந்திய அரசும் மாநில அரசும் வழங்கிய நிலையான அறிவுறுத்தல்கள் பின்பற்ற வேண்டும்.
- சமூக கூடுதல்கள்
எழுத்துப்பூர்வ அனுமதியின்றி ஒன்றுகூடுதல், ஊர்வலங்கள், தர்ணா, சபை, ஆர்ப்பாட்டம் போன்ற சமூக கூட்டங்கள் எதுவும் நடத்தப்படாது. இத்தகைய சமூகக் கூட்டத்தில் அதிகபட்சமாக 10 நபர்களைத் தாண்டக்கூடாது. அவர்கள் அனைவரும் முகக்கவசம், சானிடிசர் பயன்படுத்த வேண்டும். அவர்களுக்கு இடையே ஆறு அடி சமூக தூரத்தை வைத்திருக்க வேண்டும்.
- கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள்
கடைகள் மற்றும் பிற அனைத்து வணிக நிறுவனங்களிலும், ஒரு நேரத்தில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச நபர்கள், வாடிக்கையாளர்கள் அறையின் அளவைப் பொறுத்து இருபதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கடையில் உள்ள அனைத்து நபர்களும் வாடிக்கையாளர்களும் முகம் கவசம் அணிய வேண்டும். அவர்களுக்கு இடையே ஆறு அடி சமூக தூரம் சமூக விலகல் அவசியம். கடையின் உரிமையாளர் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டிற்காக சானிடிசரை வழங்குவார்.
- பொது இடங்களில் துப்புவதை தடை செய்தல் எந்தவொரு நபரும் பொது இடங்களில், சாலை அல்லது நடைபாதையில் துப்பக்கூடாது.
- ஜாக்ரதா மின்-தளங்களில் பதிவு மற்றமாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் வேறு எந்த நாட்டிலிருந்தும் கேரளாவுக்குச் செல்ல விரும்புவோர் அனைவருமே தொடர்புகளை கண்டுபிடிப்பதற்கும், தனிமைப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கும் ஜாக்ரதா மின்-தளங்களில் பதிவு அவசியம்.
- மாநிலங்களுக்கு இடையேயான சாலை போக்குவரத்து
பொது மற்றும் தனியார் துறைகளால் கேரளாவிலிருந்து மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்தின் நிறுத்தப்படும்.