கொல்லம்
இந்தியா என்னும் பெயரை பாடப் புத்தககங்களில் பாரத் என மாற்ற கேரள கல்வி அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நேற்று திருவனந்தபுரம் கோட்டையில் ஒரு புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் இந்த விழாவில் பங்கேற்றார். அதன் பிறகு கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
ஆளுநர் தனது பேட்டியில்,
”இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இந்தியா, பாரதம் ஆகிய 2 பெயர்களும் உள்ளவை தான். நாட்டில் பள்ளி பாடப் புத்தகங்களில் இந்தியா என்பதை நீக்கி விட்டு பாரதம் என சேர்க்க என்.சி.ஆர்.டி. அமைத்த சமூக அறிவியலின் உயர்மட்டக்குழுவின் முடிவை வரவேற்கிறேன். பாடப் புத்தகங்களில் பாரதம் என்ற பெயர் மாற்றம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது அல்ல.”
என்று கூறினார்.
கொலத்தில் ஆளுநரின் கருத்து தொடர்பாகக் கல்வி அமைச்சர் சிவன் குட்டி அளித்த பேட்டியில்,
“பள்ளி பாட புத்தகங்களில் இந்தியா என்ற பெயரை நீக்கி விட்டு பாரதம் என சேர்க்கும் முடிவை அங்கீகரிக்க முடியாது. பாட புத்தகங்களில் காவி பூசி, இதன் மூலம் இந்தியாவின் வரலாற்றை மாற்ற முயற்சி நடக்கிறது. பாட புத்தக சீர்திருத்தம் என்ற பெயரில் ஜனநாயகத்திற்கு எதிரான சிந்தனைகள் விதைக்கப்படுகிறது. பாரதம் என்ற மாற்றத்தை கேரளம் புறக்கணிக்கும்”
என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.