
காசர் கோடு
கேரளாவில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது இளம் வீரர் ஒருவர் மாரடைப்பால் மைதானத்தில் மரணம் அடைந்துள்ளார்.
கேரளா மாநிலம் காசர் கோடில் மஞ்சேஸ்வர் மெய்யபடவு என்னும் பள்ளி உள்ளது. அந்தப் பள்ளி மைதானத்தில் உள்ளூர் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி நடந்துக் கொண்டிருந்தது. அப்போது அந்த மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த பத்மநாபா என்னும் 20 வயது கிரிக்கெட் வீரர் திடீரென மயங்கி விழுந்தார்.
சக வீரர்கள் அவரை உடனடியாக மருஹ்த்டுவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு பத்மநாபாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதகவும் வழியிலேயே அவர் மரணம் அடைந்து விட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பத்மநாபாவின் மரணம் கேரளா கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் பெரும் சோகத்தை உண்டாக்கி உள்ளது. இதனால் இந்த பிரிமீயர் லீக் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]