திருவனந்தபுரம்,

த்திய அரசு கொண்டுவந்து ஆடு, மாடு, ஒட்டகம் வெட்ட மற்றும் விற்பனை செய்யும் சட்ட திருத்தத்துக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

மத்தியஅரசின் இந்த அறிவிப்புக்கு  கேரளா மாநிலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கேரளா முதல்வர் பினராய் விஜயன் கூறுகையில்,‘‘ஆர்எஸ்எஸ் அஜெண்டாவை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது என கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்நிலையில், மத்திய அரசின் புதிய சட்டதிருத்தத்தை எதிர்த்து, கேரள மாநில இளைஞர் காங்கிரசார் நடுரோட்டில் கன்று குட்டியை வெட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த  கொடூர  சம்பவத்திற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

மத்திய அரசின் இந்த சட்டதிருத்தத்தை எதிர்த்து,  கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில்  மாட்டுக்கறி விருந்து நடைபெற்று வருகிறது. இதில் பொது மக்களும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், கேரள மாநிலம் கண்ணூரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடந்த போராட்டத்தில் நடுரோட்டில் கன்று குட்டியை வெட்டி கொன்று, அதன் இறைச்சியை பொதுமக்களுக்கு விநியோகித்தனர்.

நடுரோட்டில் கன்று குட்டியை இளைஞர் காங்கிரசார் வெட்டும் காட்சி அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மிருகத்தனமான இந்த செயலுக்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து  காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியும், மனிதாபிமானமற்ற இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

இந்த செயலை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது காட்டுமிராண்டித்தனமான செயலாகும். இதில் ஈடு பட்ட வர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களை காப்பாற்ற கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று கூறி உள்ளார்.

இதற்கிடையில் நடுரோட்டில் கன்று குட்டியை வெட்டி யது தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் பாராளுமன்ற மண்டல தலைவர் ரெஜிஸ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது கண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தவறு செய்த இளைஞர் காங்கிரசாரை ராகுல் கண்டித்திருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.