திருவனந்தபுரம்:

கேரளாவை அச்சுறுத்தி வரும்  நிபா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்த நர்ஸ் லினியின் கணவருக்கு அரசு வேலை மற்றும் 10லட்சம் நிவாரணம் வழங்க கேரள அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

கேரளாவின் ஒருசில பகுதிகளில் நிபா எனப்படும் வவ்வால் மூலம் பரவுவதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ் காரணமாக காயச்சல் ஏற்பட்டு இதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்குதலுக்கு மருத்துவமனையில் பணி புரிந்து வந்த நர்ஸ் ஒருவரும் பலியானார்.  இது மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக பாதிக்கப்பட்ட நர்ஸ் லீனி குடும்பத்தாருக்கு உதவ கேரள அரசு முன்வந்தது. அதன்படி, லினியின்  கணவருக்கு அரசு வேலையும், அவரது குழந்தைகள் இருவருக்கும் தலா 10 லட்சம் வழங்கவும் கேரளா அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் நிபா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானோருக்கு தலா 5 லட்சம் வழங்க இருப்பதாகவும்  கேரளா முதல்வர் பினராயி விஜயன் தனது டுவிட்டர் பக்கத்தில்  அறிவித்துள்ளார்.