திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் பாஜக கருப்புப் பண நெருக்கடிகளில் சிக்கி உள்ளது.

நடந்து முடிந்த கேரள சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கடும் தோல்வியைச் சந்தித்தது.  அக்கட்சிக்கு மேலும் சோதனையாக  அதன் பிறகு, கோடகரா கறுப்புப் பண வழக்கில் கடசி   சிக்கியுள்ளது. பாஜக, ஒரு ‘வித்தியாசமான கட்சி’ என்னும் பிம்பத்திற்கு இது பெரும் தாக்குதலை ஏற்படுத்தி உள்ளது.  .ஏற்கனவே மாநிலத் தலைமையால் தேர்தல் நிதி வழங்குவதில் பரவலான முறைகேடுகள் நடந்ததாக சில தலைவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு.  ஒரு பகுதியினருடன் உட் கட்சி பூசல் தீவிரமடைந்தது.

கடந்த ஏப்ரல் 3 ம் தேதி கோடகராவில் சென்று கொண்டிருந்த ஒரு காரில் இருந்த பிடிபட்ட கணக்கில் வராத பணம் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒதுக்கப்பட்டது என  ஆர் எஸ் எஸ் தொண்டரும் இளைஞர் அணி முன்னாள் தலைவரும் ஆன ஒருவர் தெரிவித்தார்.  இந்த காரில் முதலில் ரூ.25 லட்சம் இருந்ததாகக் கூறப்பட்டு அதன்பிறகு அது ரூ.3.5 கோடி என அவர் மாற்றி வாக்குமூலம் அளித்துள்ளார்.  இந்த பணம் கர்நாடகாவிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையொட்டி மாவட்ட அளவிலான பல தலைவர்களை காவல்துறையினர் விசாரித்துள்ளனர்.  இவர்களில் பாஜக மாநில பொதுச் செயலாளர் (அமைப்பு) எம் கணேசன் மற்றும் மாநில அலுவலக செயலாளர் ஜி கிரீசன் ஆகியோரும் அடங்குவர், இந்த விசாரணை மூத்த தலைவர்கள் வரை செல்லலாம் என என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

கோடகரா நிகழ்வுக்குப் பிறகு பாஜகவின் இருபிரிவினருக்கு இடையே நடந்த வன்முறை மோதலால் கட்சியின் பெருமை மேலும் குறையத் தொடங்கி உள்ளது.   இது குறித்து திருச்சூர் மாவட்ட தலைவர்கள் மீது முகநூலில்  குற்றம் சாட்டிய  பாஜக பிரமுகர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த கறுப்புப் பண விவகாரத்தைக் கண்டு கொள்ளாமல் பாஜக மாநில தலைவர் சுரேந்திரன் விலகி உள்ளார்.   அவர் அனைத்து தேர்தல் செலவுகளும் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் வெளிப்படையாக நடந்துள்ளதாகக் கூறி உள்ளார்.   கேரள மாநிலத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்பட்ட கேரள மாநிலத்தில் பாஜக பெருமளவில் பணம் செலவழித்துள்ளது வியப்பை அளித்துள்ளது.

ஒரு கட்சியைப் பொறுத்தவரைப் பிரச்சினைகள் நேரத்தில்  அது பின்பற்றும் நிலைப்பாட்டைப் பொறுத்தே மதிக்கப்படுகிறது.   ஆனால் பாஜக தேர்தல் செலவுக்கான பண விஷயத்தில் பாஜக தவறாக நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அரசியல் ஆய்வாளர் ஜே பிரபாஷ், “தேர்தலில் நியாயமாகப் போட்டியிட பாஜக தனது தொண்டர்களை விடப் பணத்தை நம்பி தொடர்ந்து நம்பி வருகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில  பிரிவுகளுக்கு இடையே தேர்தல் நிதி குறித்து கடும் புகார்கள் எழுந்துள்ளதால் உள் தணிக்கை நடக்க வேண்டும் எனக் கோரியுள்ளன.  இந்த நிதி ஒதுக்கீடு தொகுதிகளை ஏ பி சி  என வகைப்படுத்தி அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.