கேரளாவில் கொட்டி தீர்க்கும் கனமழை; மூணாறு நிலச்சரிவில் சிக்கி 17 பேர் பலி என தகவல்

Must read

திருவனந்தபுரம்: கேரளா மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இடுக்கி ராஜ மலையில் வு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 16 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த பகுதியில் தமிழக தோட்டத் தொழிலாளர்கள் தங்கி உள்ளனர்.

80க்கும் மேற்பட்டோர் இருந்த அப்பகுதியில் மண்சரிவில் 20 பேர் சிக்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுவரை 10 பேர் உயிரிழந்து உள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர், தொடர்ந்து மீட்பு பணியில் இறங்கி உள்ளனர்.

இந் நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 57 பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது. மண்ணில் புதையுண்டவர்களில் பெரும்பாலானோர் தமிழர்களாக இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

More articles

Latest article