டில்லி

கென்யா நாட்டில் இருந்து இந்தியாவுக்கு 12 டன்கள் காப்பி, டீ மற்றும் நிலக்கடலை கொரோனா நிவாரண உதவியாக அனுப்பப்பட்டுள்ளது.

இரண்டாம் அலை கொரோனாவால் இந்தியா கடும் பாதிப்பு அடைந்துள்ளது.  உலக அளவில் தினசரி பாதிப்பில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.  மொத்த கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இதனால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.   இதையொட்டி இந்தியாவுக்குப் பல நாடுகளும் உணவுப் பொருட்களை அனுப்பி உதவி வருகின்றன.

அவ்வகையில் கென்யா நாடு தனது உள்நாட்டில் உற்பத்தியில் இருந்து 12 டன்கள் டீ, காப்பி மற்றும் நிலக்கடலை ஆகியவற்றை இந்தியச் செஞ்சிலுவைச் சங்கத்துக்கு கொரோனா நிவாரண உதவியாக அனுப்பி உள்ளது.