மும்பை,

மும்பை ரெயில் நிலைய கூட்ட நெரிசலில்  பலியானோரின் நெற்றியில் எண்களை எழுதியதால் சர்ச்சையில் சிக்கி உள்ளது தனியார் மருத்துவமனை. இதற்கு கடும் கண்டனடங்கள் எழுந்துள்ளது.

நேற்று காலை மும்பை மும்பை என்பின்ஸடன் ரயில் நிலையத்தில் திடீர் வதந்தி காரணமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டு, அதில்  சிக்கி  22 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 50க்கும் மேற்பட்டோல் காயமடைந்தனர்.  அவர்களை உடனடியாக  அருகிலுள்ள கேஇஎம் மருத்துவ மனைக் கொண்டுசென்றனர்.

அங்கு மருத்துவமனை ஊழியர்கள், இறந்தவர்களின் நெற்றியில், அடையாளம் காணும் வகையில்  எண்களை எழுதி உள்ளனர்.

பலியானவர்களை அடையாளம் காண்பதற்காக, அவர்களது புகைப்படங்களை மருத்துவமனை யின் நுழைவாயிலில் பொதுமக்கள் பார்வைக்காக வைத்துள்ள மருத்துவ மனை ஊழியர்கள், அதில் ஒவ்வொரு புகைப்படத்துக்கும் ஒரு எண் கொடுத்து, அந்த எண்ணுக்குரியவரின் உடலை அடையாளம் காண நெற்றியில் அந்த எண்ணை ஒட்டியுள்ளனர்

இது கொடுமையான செயல் என்று மருத்துவனை நிர்வாகத்துக்கு எதிராக கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

இதுகுறித்து வலைதளங்களிலும் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

இதற்கு விளக்கம் அளித்துள்ள மருத்துவமனை நிர்வாகம், உயிரிழந்த பலரின் உடல்களை  எந்த பிரச்னையும் இல்லாமல் அடையாளம் காணவும், உறவினர்களிடம் ஒப்படைக்கவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.