டெல்லி:
தலைநகர் டெல்லியை ஆட்சி செய்து வரும் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி அரசு பல்வேறு அதிரடி திட்டங்களை அறிவித்து மக்களிடையே செல்வாக்கை பெருக்கி வருகிறது.
ஏற்கனவே 200 யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு மின் கட்டணம் கிடையாது என்று முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், வாடகைதாரர்களுக்கும் மின்சலுகை அறிவித்து உள்ளார்.
டெல்லி சட்டமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2020) தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட வரும் ஆம்ஆத்மி அரசு, மெட்ரோ ரெயில் மற்றும் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்புக்கு டெல்லி மக்களிடையே பெரும் வரவேற்பு கிட்டியதைத் தொடர்ந்து, 200 யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு மின் கட்டணம் கிடையாது என்று அடுத்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதன் காரணமாக டில்லி வாழ் மக்கள் உள்ளம் குளிந்துள்ள நிலையில், வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கும் தற்போது மின் சலுகையை அறிவித்து உள்ளார்.
அதன்படி, வீடுகளில் குடித்தனம் இருப்பவர்கள் 3 ஆயிரம் ரூபாய் முன்வைப்புத் தொகை செலுத்தி னால் தனியாக பிரீபெய்டு மீட்டரை அரசு பொருத்தும் என்றும், இதற்கு வீட்டு உரிமையாளரின் ஒப்புதல் தேவையில்லை என்று தெரிவித்து உள்ளார்.
இந்த திட்டம் வீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு மட்டுமே பொருந்தும் என்றும் அறிவித்து உள்ளார். இது பெரும் வரவற்பை பெற்றுள்ளது.
இதன் காரணமாக, வாடகை தாரர்கள் 200 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் உபயோகப் படுத்தினால் மின் கட்டணம் கட்ட தேவையில்லை.
ஏற்கனவே 200 யூனிட் வரை மின்சாரத்தைப் பயன்படுத்தினால் இலவசம் மற்றும், 201 முதல் 400 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு 50 சதவீதம் மானியத்தை கெஜ்ரிவால் தலைமை யிலான ஆம்ஆத்மி அரசு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.