டெல்லி: ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி திகாரில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு, தேர்தலையொட்டி, உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கிய நிலையில், அவரது ஜாமின் முடிவடைந்து இன்று மீண்டும் சிறைக்கு செல்கிறார். இதை, அவர், தான் நாட்டை காக்க மீண்டும் சிறைக்கு செல்வதாக பெருமிதத்துடன் தெரிவித்து உள்ளார்.
இன்றைய அரசியல்வாதிகளில் பெரும்பாலோர் ஊழல்வாதிகளாக உள்ள நிலையில், அவர்கள்மீதான வழக்குகளும் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதை தங்களுக்கு சாதமாக்கி க்கொள்ளும் அரசியல்வாதிகள், தங்களை தியாகிகளைப் போற பறைச்சாற்றி கொள்ளும் அவலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த லிஸ்டில் தற்போது டெல்லி முதல்வரான கெஜ்ரிவாலும் இடம்பெற்றுள்ளார்.
ஊழக்கு எதிரான சமூக ஆர்வலர் அன்னா ஹசரே உடன் போராட்டத்தில் கலந்துகொண்ட ஐஏஎஸ் அதிகாரியான அரவிந்த் கெஜ்ரிவால், மத்தியஅரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி உள்ளனார். இவர் கடந்த 2012 ஸ்வராஜ் என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டார், இது இந்திய ஜனநாயகத்தின் ஊழல் மற்றும் மாநிலத்தின் மீதான அவரது கருத்துக்களை விவாதப்பொருளாக்கியது. முன்னதாக அவர் 2006 வருமான வரி துறையினரின் கூட்டு ஆணையாளர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு கிடைத்த பணப்பலனை மற்றும் விருது மூலம் பெற்ற பணத்துடன் ஒரு கார்பஸ் நிதி ஒன்றை உருவாக்கினார். மேலும் பொது சார்பற்ற நிறுவன அறக்கட்டளை ஒன்றும் நிறுவப்பட்டது. 1999 மின்சாரம், வருமான வரி மற்றும் உணவு ரேஷன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் குடிமக்களுக்கு உதவுவதற்காக ஒரு அரசு சாரா நிறுவனமான பரிவார்தனை கெஜ்ரிவால் நிறுவியுள்ளார். இவர், 1993ம் ஆண்டு ஐஆர்எஸ் அதிகாரி சுனிதாவை மணந்தார்.
2012 ஆம் ஆண்டு முதல் ஜன் லோக்பால் மசோதாவுக்கு கோரிக்கை விடுத்துள்ள ஊழல்வாதிகளுக்கு எதிரான மக்கள் இயக்கத்தை அரசியல் ரீதியாக அரசியல்வாதிகள் செய்ய வேண்டுமா அல்லது வேண்டாமா என கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக, அன்னா ஹசாரேவுக்கும் கெஜ்ரிவாலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்து வெளியேறி, மக்களுக்குநேர்மையான அரசாங்கத்தை கொடுக்கப்போவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி, அதற்கான ஆம்ஆத்மி என்ற பெயரில் ஒரு அரசியல் கட்சியையும் 2012 தொடங்கி மக்களிடைய பெரும் வரவேற்பை பெற்றார்.
ஆரம்ப காலத்தில் கெஜ்ரிவாலின் நம்பிக்கைக்குரிய பேச்சு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதால், டெல்லி மாநில ஆட்சியை கைப்பற்றினார். முதல்தடவை ஆட்சிக்கு வந்தபோது, ஏராளமான நலத்திட்டங்களை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியதால், 2வது முறையும் ஆட்சிக்கு வந்தார். ஆனால், இந்த முறை, அவரது ஆட்சியில் ஏராளமான ஊழல்கள் அரங்கேறி உள்ளது வெளிச்சத்துக்கு வந்தது.
குறிப்பதாக, தனது ஆதரவாளர்களுக்காக மதுபான கொள்ளை முறைகேடுகளில் ஈடுபட்டது வெட்ட வெளிச்சமானது. இதுதொடர்பாக அவரது நெருக்கிய நண்பரும், துணை முதல்வருமாக இருந்த சிசோடியா உள்பட பல ஆம்ஆத்மி கட்சியினர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. உச்சபட்சமாக கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில் மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டால், தான் பிரசாரம் செய்ய அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தை அனுப்பினார். அதன்பேரி உச்சநீதிமன்றம் அவருக்கு ஜுன் 1ந்தேதி நிபந்தனை ஜாமின் வழங்கியது. இதன் காரணமாக திகாரில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவால் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு தனது கட்சியினருக்கும் இண்டி கூட்டணிக்கு ஆதரவாகவும் செயல்பட்டார்.
இந்த நிலையில், அவரது இடைக்கால ஜாமீன் இன்றுடன் முடிவடைவதால், நாளை காலை மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும். இதைத்தொடர்ந்து, கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தான் சிறைக்கு செல்வதால், டெல்லியில் தனது அரசாங்கம் செய்து வரும் பணிகள் நிறுத்தப்படாது என்றார். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு தனது இல்லத்தில் இருந்து சிறைக்கு செல்வதாக அவர் கூறினார். அவர் சிறையில் “சித்திரவதை” செய்யப்படலாம் என்றும் “நாம் அனைவரும் சேர்ந்து சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடுகிறோம். நாட்டைக் காப்பாற்ற எனக்கு ஏதாவது நேர்ந்தால், என் உயிரைக் கூட இழந்தால், வருத்தப்பட வேண்டாம், ”என்று தேரிவித்துள்ளார்.
மேலும், “உங்கள் குடும்பத்தின் மகனாக எனது கடமையை நான் எப்போதும் நிறைவேற்றி வருகிறேன். இன்று நான் உங்களிடம் என் குடும்பத்திற்காக ஒன்று கேட்க விரும்புகிறேன். என் பெற்றோர் மிகவும் வயதானவர்கள், என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை, சிறையில் இருக்கும் நான் அவரைப் பற்றி நான் மிகவும் கவலைப்படுகிறேன். நான் போன பிறகு என் பெற்றோரை கவனித்துக் கொள்ளுங்கள்… என் அம்மாவுக்காக தினமும் பிரார்த்தனை செய்தால், அவர் நிச்சயமாக ஆரோக்கியமாக இருப்பார்,” என்றார்.
தொடாந்து, லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்காக 21 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றத்திற்கு கெஜ்ரிவால் நன்றி தெரிவித்தார். மேலும், நாளை உடன் 21 நாட்கள் முடிவடைகின்றன, நாளை மறுநாள் நான் சரணடைய வேண்டும். நாளை மறுநாள் மீண்டும் திகார் சிறைக்கு செல்வேன். இந்த நேரத்தில் இவர்கள் என்னை எத்தனை நாட்கள் சிறையில் அடைப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் எனது நம்பிக்கை அதிகமாக உள்ளது.
சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டைக் காப்பாற்ற நான் சிறைக்குச் செல்வதில் பெருமை கொள்கிறேன். அவர்கள் என்னை பல வழிகளில் உடைக்க முயன்றனர்… என்னை அமைதிப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் வெற்றிபெறவில்லை,” என்று வீடியோ செய்தியில் கெஜ்ரிவால் கூறினார், சிறையில் “சித்திரவதை” செய்யப்பட்டதாக குற்றம் சாட்டினார்.
என்னைப் பல வழிகளில் சித்திரவதை செய்தார்கள். அவர்கள் என் மருந்துகளை நிறுத்தினர்; நான் 20 வருடங்களாக தீவிர சர்க்கரை நோயாளியாக இருக்கிறேன்… சிறையில், பல நாட்கள் இன்சுலின் ஊசியை நிறுத்திவிட்டார்கள், என் சர்க்கரை 300, 325 (mg/dL) ஐ எட்டியது. சர்க்கரை அளவு தொடர்ந்து அதிகமாக இருந்தால், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிக்கப்படும். அவர்கள் என்ன விரும்புகிறார்கள், ஏன் இதைச் செய்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை, ”என்று அவர் கூறினார்.
மீண்டும் சிறைக்குச் செல்வதற்கு முன் நோயறிதல் சோதனைகள் தேவை என்று பேசிய ஆம் ஆத்மி தலைவர், “நான் கைது செய்யப்பட்டபோது எனது எடை 70 கிலோவாக இருந்தது. இன்று 64 கிலோவாக உள்ளது. சிறையில் இருந்து வெளியே வந்த பிறகும் என் உடல் எடை கூடவில்லை. இது உடலில் ஏதேனும் பெரிய நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பல சோதனைகள் செய்யப்பட வேண்டும், என் சிறுநீரில் கீட்டோன் அளவும் நிறைய அதிகரித்துள்ளது.
அவர் இல்லாத நேரத்திலும் டெல்லி அரசு தொடர்ந்து செயல்படும் என்று கூறிய முதல்வர், “உங்கள் இலவச மின்சாரம், மொஹல்லா கிளினிக்குகள், மருத்துவமனைகள், இலவச மருந்துகள், சிகிச்சை, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், 24 மணி நேர மின்சாரம் மற்றும் இதர பணிகள் தொடரும். திரும்பி வந்த பிறகு, ஒவ்வொரு தாய் மற்றும் சகோதரிக்கும் ஒவ்வொரு மாதமும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று கூறினார்.