டெல்லி

ரும் டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

நேற்று தெற்கு  டெல்லியின் ஷேக் சராய் பகுதியில் நேற்று மாலை கெஜ்ரிவால் பாதயாத்திரை மேற்கொண்டபோது, நபர் ஒருவர் கெஜ்ரிவாலை நோக்கி மர்ம திரவத்தினை ஊற்றினார். எனவே கெஜ்ரிவால் மற்றும் அவரை சுற்றியிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த நபர் அசோக் ஜா என பின்னர் அடையாளம் காணப்பட்டார். காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரவிந்த் கெஜ்ரிவால் மீது 35 நாட்களில் நடத்தப்படும் 3-வது தாக்குதல் இதுவாகும்.

நேற்று டெஇல்லிஐ, ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முன்னாள் முதல்-மந்திரியான கெஜ்ரிவால் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார்.

அந்த சந்திப்பில் கெஜ்ரிவால்,

“சட்டம் ஒழுங்கு விவகாரத்தில், அமித்ஷா சில நடவடிக்கைகளை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது. அதற்கு பதிலாக பாதயாத்திரையின்போது தாக்கப்பட்டேன். திரவம் ஊற்றியதில் தீங்கு எதுவும் ஏற்படவில்லை. ஆனால், அது தீய விளைவை ஏற்படுத்தியிருக்கலாம்.

அடுத்த ஆண்டு நடைஎற உள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரசுடனோ அல்லது இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுடனோ, டெல்லியில் கஆம் ஆத்மி கட்சி தேர்தலை தனித்து சந்திக்க உள்ளது.”

எனத் தெரிவித்துள்ளார்.