நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராய் இருந்தபோது அப்போதைய பிரதமர் மன் மோகன் சிங்கை சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து மன்மோகன் சிங்கை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கி வந்தார்.
அவரின் பாணியை பின்பற்றி தற்போது தில்லி முதலமைச்சராய் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடிக்கு சமூகவலைத்தளத்தில் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி அவரை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கி வருகின்றார்.
அவரது கேள்விகள் சில:
- பிரதமர் மோடி அவர்களே ! இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வங்கிகளின் வராக்கடன் தொகையை குறைப்பேன் என்றீர்கள். ஆனால், விஜய் மல்லையாவை இந்தியாவை விட்டு தப்பிக்கவிட்டீர்கள்.
2. பிரதமர் மோடி அவர்களே ! இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஊழலை ஒழிப்பேன் என்றீர்கள், ஆனால் வியாபம், லலித்கேட், மல்லையா, கட்சே ஊழல் குறித்து மன்மோகனைப்போல் மௌனம் காக்கின்றீர்கள்.
3. பிரதமர் மோடி அவர்களே ! இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயிகளுக்கு அவர்களது உற்பத்தி விலையில் 50% லாபம் கிடைக்கவகைசெய்வேன் என்றீர்கள். ஆனால் பல விவசாயிகள் தற்கொலை செய்தும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளீர்கள்.
4. பிரதமர் மோடி அவர்களே !இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தலித்களுக்கு கல்வி வழங்குவதாக உறுதி கூறினீர்கள். ஆனால் ரோகித் வெமுலா மரணம் குறித்து மௌனம் காக்கின்றீர்கள்.
5. பிரதமர் மோடி அவர்களே !இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நீதிபதிகள் எண்ணிக்கையை இரண்டுமடங்காக்குவேன் என்றும் நீதிமன்றங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றீர்கள். ஆனால் தலைமைநீதிபதி கண்ணீர் விட்டு கதறியும் நீங்கள் செயல்பட மறூக்கின்றீர்கள்.
6. பிரதமர் மோடி அவர்களே ! இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய அரசு பிரதமரை மட்டும் உள்ளடக்கியது அல்ல, முதலமைச்சர்களையும் உள்ளடக்கியது என்று கூறினீர்கள். ஆனால் பல முதலமைச்சர்களை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டுகின்றீர்கள்.
இவ்வாறு அரவிந்த்கெஜ்ரிவால் டிவிட்டரில் கேள்விக்கணைகளை தொடுத்துள்ளார்.
இவ்வாறு அரவிந்த்கெஜ்ரிவால் டிவிட்டரில் கேள்விக்கணைகளை தொடுத்துள்ளார்.
இதே பாணியில் தான் நரேந்திர மோடி மன்மோகன் சிங்கை விமர்சித்தே தமது பிரதமர் பதவி குறிக்கோளை நிறைவேற்றிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோடியின் இரண்டாண்டு ஆட்சி குறித்து மக்கள் அதிக ஏமாற்றமாய் நினைப்பது என்ன?