கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘சர்கார்’.இதைத் தொடர்ந்து, ‘மரக்கார்: அபிரக்கடலிண்டே சிம்ஹம்’ என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
அமித் சர்மா இயக்கும் ஹிந்தி படத்திலும் அறிமுகமாகிறார். இரண்டு தெலுங்குப் படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
இந்நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச், கீர்த்தி சுரேஷை வைத்து ஒரு படத்தைத் தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது. அறிமுக இயக்குநர் இயக்கவுள்ள இந்த படம் .அடுத்த ஆண்டு ரிலீஸாகும் எனத் தெரிகிறது.