
சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்குப் பின் கீர்த்தி சுரேஷ் தமிழில் நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கவுள்ளார்.
`மகாநடி’ படத்தில் நடித்திருந்த கீர்த்தி சுரேஷ், சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றிருந்தார். இதைத் தொடர்ந்து, அவர் நடிக்கும் புதியபடம் ஒன்றின் அறிவிப்பு தற்போது வந்துள்ளது.
இப்படத்தை ஈஷ்வர் கார்த்திக் இயக்குகிறார். எமோஷனல் – மிஸ்டரி- திரில்லர் கலந்த கலவையாக இத்திரைப்படம் உருவாகவுள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்யும் படத்திற்கு, அனில் க்ரிஷ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளார்.
ஸ்டோன் பென்ச் நிறுவனம் சார்பில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கவுள்ள இப்படம் வரும் செப்டம்பர் மாதம் கொடைக்கானலில் துவங்கவுள்ளது. புரொடக்ஷன் நெ.3 என தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் தலைப்பு விரைவில் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
[youtube-feed feed=1]