2015-ம் ஆண்டு தீபாவளி அன்று அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், ராகுல் தேவ், கபீர் சிங், வித்யூலேகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘வேதாளம்’.
இந்தப் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய ஆயத்தமாகியுள்ளனர் .முதலில் பவன் கல்யாண் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால்,தற்போது சிரஞ்சீவி அஜித் வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேசிடம் பேசி உள்ளனர்.
தெலுங்கு வேதாளத்தில் லட்சுமி மேனன் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தை மெஹர் ரமேஷ் இயக்கவுள்ளதாகவும், அனில் சுக்ரா – ராம்சரண் – ஏ.எம்.ரத்னம் மூவரும் இணைந்து தயாரிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 22-ம் தேதி சிரஞ்சீவி பிறந்த நாளாகும். அன்றைய தினம் ‘லூஃசிபர்’ ரீமேக் மற்றும் ‘வேதாளம்’ ரீமேக் ஆகியவை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.