தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய், நேற்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர் .

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது தனித்துவமான நடன வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய்யின் பிறந்தநாளில், ஒரு ஆச்சரியமான வீடியோவைக் கொண்டு வருவதாக, முன்னதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார் கீர்த்தி.

அதை நிறைவேற்றும் வண்ணம் ‘ஆல் தோட்ட பூபதி’ பாடலுக்கு நடனமாடியுள்ளார். அதுவும் விஜய்யின் சிக்னேச்சர் ஸ்டெப்களையே முழுவதுமாக ஆடியுள்ளார்.

கீர்த்தி தனது சகோதரரை பார்ட்னராகக் கொண்டு, விஜய்யின் நடன அசைவுகளை பின்பற்றி அழகான வீடியோவை உருவாக்கியுள்ளார். இந்த கண்கவர் நடன வீடியோ இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது.

[youtube-feed feed=1]