
’ரங் தே’ படப்பிடிப்பின் போது படகை நிறுத்துவதற்காக தலை தெறிக்க தான் ஓடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
கீர்த்தி தனது சமூக ஊடக பக்கத்தில் தற்போது ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் “மை போட்” என்று கத்திக் கொண்டு ஓடுகிறார். “எனக்காக காத்திருங்கள்” என்று கூறும் அவர், பின்னால் திரும்பி “என் தொலைபேசி” என்று கேட்கிறார்.
இதனை யாரோ ரெக்கார்ட் செய்வதை உணர்ந்து, “பதிவை நிறுத்து” என்கிறார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த ‘ரங் தே’ படப்பிடிப்பின் போது தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
https://www.instagram.com/p/CM5Bf8RJCuy/
Patrikai.com official YouTube Channel