
கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய தமிழ்ப்படத்தின் ஷூட்டிங், கொடைக்கானலில் நேற்று (செப்டம்பர் 12) தொடங்கியது.
இந்தப் படத்தை, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் தயாரிக்கிறது.
அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, அனில் க்ரிஷ் எடிட் செய்கிறார். முழுக்க த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகிறது.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]