தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்பவர் எம்.எம்.கீரவாணி. இவர் தமிழில் மரகதமணி என்ற பெயரில், அழகன், வானமே எல்லை, நீ பாதி நான் பாதி, ஸ்டூடெண்ட் நம்பர் 1 உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இளையராஜாவின் தீவிர ரசிகரான கீரவாணி, அவரின் பெருமைகளை அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துக் கொள்வார்.

இந்நிலையில் சென்னை வந்த அவர், இளையராஜாவின் ஸ்டூடியோவுக்கு சென்று, அவரை சந்தித்துள்ளார். ஸ்டூடியோவுக்கு வெளியில் நின்று எடுத்த செல்ஃபியை பகிர்ந்த அவர், ’இந்த நாள் சிறப்பாக இருக்கும்’ எனத் தெரிவித்திருந்தார்.

உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகியப் படங்களுக்கு இசையமைத்த கீரவாணி, தற்போது ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்துக்கும் இசையமைத்திருக்கிறார்.