மதுரை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் தொல்லியல் துறை நடத்திய ஆய்வு முடிவுகளை மத்தியஅரசு விரைவில் வெளியிட வேண்டும் என தமிழக வர்த்தகம் மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன்மற்றும் அதிகாரிகள் இன்று சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு அமைக்கப்பட்டு அருங்காட்சியகம் அகழாய்வு பணிகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டனர். கண்காட்சியில் வைக்கப்பட உள்ள பழங்கால மக்கள் பயன்படுத்திய பொருட்கள், தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், கற்கள், மணிகள், தங்கத்திலான பொருட்கள் போன்றவற்றை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, கொரோனா காரணமாக போடப்பட்டிருந்த ஊரடங்குக்கு பின்பு தற்போது மீண்டும் ஆய்வு பணிகள் தொடங்கி உள்ளது. இது மகிழ்ச்சியே. இதுவரை நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை மத்தியஅரசு விரைந்து வெளியிட வேண்டும் விரைவில் இங்கு அருங்காட்சியகம் அமைக்கும் பணி தொடங்கும் என தெரிவித்துள்ள அவர், இந்த அருங்காட்சியகம் உலக அளவில் பேசக் கூடிய ஒன்றாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.