ஐதராபாத்:
2018ம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற தெலுங்கானா சட்டமன்ற தேர்தல் ஆளுங் கட்சியான தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சி அபாரமான வெற்றி பெற்ற நிலையில், மாநில முதல்வராக 2வது தடவையாக சந்திரசேகர ராவ் பதவி ஏற்கிறார். அவருடன் மேலும் ஒரு அமைச்சர் மட்டுமே பதவி ஏற்றார்.
இந்த நிலையில் தற்போது தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்துள்ள சந்திரசேகர ராவ், புதியதாக 10 அமைச்சர்களை நியமித்து உள்ளார்.
தெலுங்கானா முதல்வர் பதவி ஏற்று சுமார் 2 மாதங்கள் கடந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்களால், தற்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கடந்த வாரம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் சந்திரசேகேர ராவ், பவுர்ணமி நாளான பிப்ரவரி 19-ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என அறிவித்தார். அதன்படி தெலுங்கானா மாநில அமைச்சரவையை இன்று விரிவாக்கம் செய்தார் முதல்வர் சந்திரசேகர ராவ். 10 அமைச்சர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் 6 பேர் புதுமுகங்கள். சந்திரசேகர ராவின் முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்ற இந்திரகரன் ரெட்டி, தலசானி சீனிவாஸ் யாதவ், ஜெகதீஷ் ரெட்டி மற்றும் ஏதலா ராஜேந்தர் ஆகியோர் மீண்டும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள னர்.
ஐதராபாத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய அமைச்சர்களுக்கு கவர்னர் இஎஸ்எல் நரசிம்மன் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இ
தன்மூலம் அமைச்சரவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்து உள்ளது. அமைச்சரவை விரிவாக்கத்தில் ஒரு பெண் உறுப்பினருக்கு கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.