
பரத் நடிக்க இருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது.
அறிமுக இயக்குநர் சக்திவேல் இயக்கும் இந்தப் படத்தை ஆக்சிஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தில் பரத்துக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார்.
இவர்களுடன் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நடித்த ராஜ்குமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். சுரேஷ் பாலா ஒளிப்பதிவாளராகவும், கலைவாணன் எடிட்டராகவும் பணிபுரிகிறார்கள்.
இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்துக்கு வந்த காவ்யா அறிவுமணி முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
[youtube-feed feed=1]Excited to share our next #Productionno12 @bharathhere @vanibhojanoffl @rajNKPK #Kavya. A Slasher Thriller Film.@Dili_AFF @nameissakthi @sureshbala @ManiLallu @kalaivananoffl @Sethu_Cine & @itspooranesh@Duraikv @decteamworks1 @R_chandru @DoneChannel1 pic.twitter.com/dp80Br7rTa
— Axess film factory (@AxessFilm) April 11, 2021