விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளராகும்,சீரியல் நடிகராகவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிக்பாஸ் சீசன் 3 புகழ் கவின்.
Ekaa எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் லிப்ட் படத்தில் கவின் ஹீரோவாக நடித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வெற்றிகரமான தொடர்களில் ஒன்று குக் வித் கோமாளி.இந்த தொடரின் இரண்டாவது சீசனில் பிரபல மாடலும் நடிகையுமான பவித்ரா லக்ஷ்மி பங்கேற்று வருகிறார்.
சமூகவலைத்தளங்களில் தற்போது கவின் மற்றும் பவித்ரா இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பது போல சில புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
இது ட்ராப் செய்யப்பட்ட ஒரு வெப் சீரிஸ் ஷூட்டிங் என்று சிலர் தெரிவித்து வருகின்றனர்.இது படமா அல்லது வெப் சீரிஸா என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.