
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காட்டேரி’. இப்படத்தில் வைபவ், வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா, மணாலி ரத்தோர், பொன்னம்பலம், கருணாகரன், ரவி மரியா, ஜான் விஜய், குட்டி கோபி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.
காமெடி கலந்த திகில், திரில்லர் படமாக இயக்குனர் டீகே உருவாக்கி இருக்கிறார். விக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு எஸ்.என்.பிரசாத் இசையமைத்திருக்கிறார்.
ஏப்ரல் 17-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இந்தப் படம், திட்டமிட்டபடி வெளியாகவில்லை.
தற்போது, யாரும் எதிர்பாராத விதமாக ‘காட்டேரி’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக தயாரிப்பில் உள்ள இந்தப் படம், ஓடிடி தளம் வாயிலாக வெளிக் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel