டில்லி

காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதில் அந்த சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது குறித்த வழக்கு இன்று டில்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததூ.   பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் புகைப்படம் பல ஊடகங்களில் வெள்யாகி உள்ளது.

டில்லி உயர்நீதிமன்றம் இதற்கு கடும் கண்டனம் தெர்வித்துள்ளது.   பலாத்கார குற்றத்தில் பாதிக்கப் பட்டோரின் புகைப்படம் வெளியிடக் கூடாது என சட்டம்  உள்ளது.   அதை மீறியதாக ஊடகங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.   அதற்கு ஊடகங்கள் அந்த சிறுமி இறந்து விட்டதால் அவரின் புகைப்படத்தை வெளியிடலாம் என தவறாகக் கருதியதாகக் கூறி மன்னிப்பு கோரியன.

ஆனால் இதை டில்லி உயர்நீதிமன்றம் ஒப்புக் கொள்ளவில்லை.   இது அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறிய செயல் எனக் கூறி உள்ளது.  மேலும் நீதிமன்றம் இவ்வாறு குற்றம் செய்த ஊடகங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.   அந்த அபராத பணத்தை  காஷ்மீர் மக்கள் நிவாரண நிதியில் அரசு சேர்க்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.