சென்னை: நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி கதிரவன் பணி நிமித்தமாக சென்னை வந்திருந்த நிலையில், மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். அவருக்கு வயது 55. அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சேலம் ஏற்காடு மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு டேன்மேக் நிறுவனத்தின் முன்னாள் மேலாண் இயக்குனராக பணியாற்றி வந்தவர் கதிரவன். சேலம் டேன்மேக் நிறுவனத்தின் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்தது. இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சேலம் டேன்மேக் நிறுவனத்தில் மேலாண் இயக்குனர் பதவிலிருந்து வேறொரு துறைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார்.
அதன்படி தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் பதவி அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. இன்று காலை தனது புதிய பதவி ஏற்றுக்கொள்ளக்கூடிய நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்தார். சென்னையில் தங்கி இருந்த இடத்தில் இன்று காலை நடைபயிற்சிக்கு சென்றார். அப்போது அவருக்கு திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அவரது மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் கதிரவன், ஐ.ஏ.எஸ் அவர்கள் மறைவெய்திய செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
. கதிரவனின் சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள காந்திபுரம் ஆகும். இது குறித்து தகவல் அறிந்து அவரது உறவினர்கள் சென்னை சென்றனர். முதுகலை வேளாண்மை பட்டதாரியான இவர் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று 2002-ம் ஆண்டு பயிற்சி துணை கலெக்டராக தர்மபுரி மாவட்டத்தில் பணியில் சேர்ந்தார். பின்னர் கள்ளக்குறிச்சி, அறந்தாங்கி, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியராக (ஆர்.டி.ஓ.) பணியாற்றினார். 2007-ம் ஆண்டு மாவட்ட வருவாய் அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற இவர் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பணியாற்றினார். சேலம் மாவட்ட ஆவின் பொதுமேலாளராகவும் பணியாற்றி உள்ளார். பின்னர் கள்ளக்குறிச்சி, அறந்தாங்கி, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியராக (ஆர்.டி.ஓ.) பணியாற்றினார். 2007-ம் ஆண்டு மாவட்ட வருவாய் அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற இவர் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பணியாற்றினார். சேலம் மாவட்ட ஆவின் பொதுமேலாளராகவும் பணியாற்றி உள்ளார். 2013-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து பெற்ற இவர் வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குனராக பணியாற்றினார். பின்னர் மதுரை மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டார். 2016-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கலெக்டராக பதவி ஏற்றார். பின்னர் ஈரோடு மாவட்டத்தின் 33-வது கலெக்டராக கடந்த 2018–ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றார். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.