தெலுங்கில் நடிகராகவும், சினிமா விமர்சகராகவும் வலம் வந்தவர் கத்தி மகேஷ். 2017ஆம் ஆண்டு ஸ்டார் மா தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார்.
சமூக வலைதளங்களில் கத்தி மகேஷுக்கும் பிரபல தெலுங்கு நடிகர்களின் ரசிகர்களுக்கும் கருத்து மோதல்கள் ஏற்படுவதுண்டு.
இந்நிலையில் கடந்த ஜூன் 25ஆம் தேதி சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் எதிரே வந்த லாரியோடு அவரின் கார் மோதி பலத்த காயங்களுடன் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரது மருத்துவ செலவுக்காக ஆந்திர அரசு ரூ.17 லட்சம் வழங்கியது.
இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் கத்தி மகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 44.