ஹாலிவுட் சூப்பர்ஸ்டார் அர்னால்டு ஸ்வார்ஸ்நெகரின் மகள் கேத்ரின் ஸ்வார்ஸ்நெகருக்கும் நடிகர் கிறிஸ் பார்ட்-க்கும் நேற்று அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் திருமணம் நடைபெற்றது.
நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே இத்திருமணத்தில் கலந்துகொண்டனர்.
மார்வெல் ஸ்டுடியோஸின் ‘கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி’ திரைப்படத்தில் நடித்தவர் கிறிஸ் பார்ட் . சமீபத்தில் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார்.
கிறிஸ் பிராட்-க்கு இது இரண்டாவது திருமணம் , இவருக்கு ஜேக் ப்ராட் என்ற 6 வயது மகன் இருக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது.