ராமேஸ்வரம்: 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் து கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அன்றைய தினம் சிலுவைப் பாதை மற்றும் சிறப்பு திருப்பலிகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​பிப்ரவரி 28ஆம் தேதி காலைத் திருவிழா திருப்பலி மற்றும் தேர்ப்பவனி முடிந்தவுடன் கொடி இறக்கத்துடன் விழா நிறைவுபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து திரு ஜெபமாலை, இருநாட்டு மக்களும் சேர்ந்து தூக்கி வரும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி, நற்கருணை ஆராதனை, இரவு அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்ட தேர்பவனி நடைபெறுகிறது. பிப். 28ம் தேதி காலை 7.30 மணியளவில் சிறப்பு திருப்பலி பூஜை, கூட்டுப் பிரார்த்தனை, பின்னர் கொடியிறக்கம் நடைபெற்று விழா முடிவடையும்.

வருடாந்திர திருவிழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் அடுத்த மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த  கச்சதீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் நடைபெறும் வருடாந்திர திருவிழாவில் தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.

இந்தியாவில் இருந்து எத்தனை பயணிகளை அனுமதிக்க லாம் என்ற அறிவிப்பினை இலங்கை அரசு விரைவில் அறிவிக்கும்.

[youtube-feed feed=1]