கச்சத்தீவு அந்தோணியார் கோவில் விழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்பு!

Must read


ராமேஸ்வரம்,
ச்சத்தீவில் புதிதாக கட்டப்பட்ட அந்தோணியார் ஆலயம் இலங்கை அரசால் கட்டப்பட்டது. திறப்பு விழாவில் கலந்துகொள்ள தமிழகத்தை சேர்ந்தவர்கள் கச்சத்தீவு சென்றனர்.
கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திறப்பு விழாவில் கலந்துகொள்ள தமிழக மீனவர்கள் 82 பேர் கச்சத்தீவுக்கு சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழக கோஸ்ட் கார்டு செய்தது.
இவ்விழாவில் கலந்துகொள்ள ராமேஸ்வரத்தில் இருந்து 82 பேர் படகுகளில் கச்சத்தீவிற்கு சென்றனர். ராமேஸ்வரத்தில் இருந்து 3 படகுகள் மூலம் 82 பேர் புறப்பட்டுச் சென்றனர்.
இதேபோல், இலங்கையில் இருந்து சுமார் 100 பேர் விழாவில் பங்கேற்றதாக தெரிகிறது.
விழாவில் பங்கேற்பது குறித்து தமிழகத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், இது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தனர்.
ஆலயத் திறப்பு விழா முடிந்ததும் அவர்கள் உடன்டியாக ராமேஸ்வரம் திரும்புவார்கள் என கூறப்படுகிறது.

More articles

Latest article