சென்னையில் முன்னணி திரையரங்குகளில் கமலா, ரோகினி,காசி போன்ற திரையரங்குகள் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்குரிய திரையரங்குகளாக இருக்கின்றன.

இந்நிலையில் காசி திரையரங்குகளின் நிறுவனர் மதிவாணன் அவர்கள் உயிரிழந்துள்ளார். மறைந்த மதிவாணன் அவர்களுக்கு வயது 73 . சென்னையில் மிக முக்கியமான முன்னணி திரையரங்குகளில் ஒன்றான காசி திரையரங்குகளின் நிறுவனரும் காசி குழுமத்தின் நிறுவனமான மதிவாணன் உயிரிழப்பு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள், சென்னை ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதிவாணன் மறைவுக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள் .