உரி:
காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் உள்ள உரி ராணுவ தலைமையத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 17 வீரர்கள் மரணம் அடைந்தனர்.
இந்திய வீரர்களின் எதிர் தாக்குதலில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் 4 வீரர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநில தலைநகரான ஸ்ரீநகரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் ஜீலம் நதிக்கரையோரம் உள்ளது உரி நகரம். இங்கு இந்திய ராணுவ படைப்பிரிவினருக்கான தலைமை முகாம் ஒன்று இயங்கி வருகிறது.
இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த முகாமுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள கம்பிவேலியை வெட்டிவிட்டு முகாமுக்குள் ஆயுதமேந்திய தீவிரவாதிகள் நுழைந்து திடீர் தாக்குதல் மேற்கொண்டனடடர. .முகாமின் மீது வெடிகுண்டுகளை வீசியும் , துப்பாக்கிகளால் சுட்டும் ஆவேசமாக தாக்குதல் நடத்தினர்.
இந்த திடீர் தாக்குதலில் அதிர்ச்சி அடைந்த ராணுவ வீரர்கள் எதிர்தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த திடீர் தாக்குதலில் 17 இந்திய ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 19 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய 4 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த துயர செய்தி கேள்விப்பட்ட மத்தியஉள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உ டனே உளவு அமைப்பு கூட்டத்தை கூட ஏற்பாடு செய்தார். ராஜ்நாத் சிங் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ரா உளவு அமைப்பின் தலைவர் மற்றும் பாதுகாப்புத்துறை, உள்துறை அமைச்சகங்களின் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டம் தற்போது முடிவுக்கு வந்தது. தாக்குதலுக்கு பிறகு தீவிரவாதிகள் தப்பி இருந்தால் அவர்களை வேட்டையாடவும், அவர்களுக்கு உதவியவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அதையடுத்து பேசிய ராஜ்நாத்சிங், உரி பகுதியில் இன்று தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மிக உயர்ந்த பயிற்சி பெற்று, அதிநவீன ஆயுதங்களுடன் இந்த தாக்குதலை அரங்கேற்றியுள்ளனர்.
இதுபோன்ற தாக்குதல்களை தூண்டிவிடும் பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவித்து, தனிமைப்படுத்த வேண்டும் என ராஜ்நாத் சிங் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.