காஷ்மீர் விவகாரம்: மூடிய அறையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இன்று விவாதம்

Must read

டில்லி:

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இன்று மூடிய அறைக்குள் விவாதம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இன்று இரவு 7.30 மணிக்கு போலந்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது,    சட்டப்பிரிவு 370 ,35 ஏ ஆகியவை நீக்கப்பட்ட பிறகு ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து ஏற்கனவே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான ஐ.நா. சபையில் கோரிய நிலையில், அது தொடர்பாக ஆலோசனை மட்டும் நடத்தலாம் என்று ஐநா.பாதுகாப்பு கவுன்சில் அனுமதி அளித்தது. இதற்கு சீனா மட்டுமே ஆதரவு கரம் நீட்டி உள்ளது. மற்ற உறுப்பு நாடுகள் ஆர்வம் காட்டாத நிலையில், இன்று  மூடிய கதவுகளின் உள்ளே தகவல் பரிமாற்றம்,  செய்வதற்கு  மட்டும் பாகிஸ்தானுக்கு அனுமதி அளித்துள்ளது.

More articles

Latest article