ஸ்ரீநகர்: காஷ்மீரில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், அங்குள்ள மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
ஜூலை 12ம் தேதி வரையிலான நிலவரப்படி, காஷ்மீரில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1708 பேர். அவர்களில், 1145 பேர் சிகிச்சையில் இருப்பவர்கள். ஒட்டுமொத்தமாக ஜம்மு-காஷ்மீரில் கொரோனா தொற்றியோரின் எண்ணிக்கை 10500 ஐ தாண்டிவிட்டது மற்றும் அதிக இறப்புகளும் பதிவாகியுள்ளன.
நோய் தொற்றியவர்களில் மோசமான நிலையில் உள்ளவர்கள், ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால், மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டியோரின் எண்ணிக்கைப் பெருக பெருக, அங்கு படுக்கைப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, கொரோனா பரவலை எதிர்கொள்ளும் வகையில், காஷ்மீர் யூனியன் பிரதேசம் தயாராகவில்லை என்பதையே இது காட்டுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.