ஸ்ரீநகர்
காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் அமைந்துள்ள தால் ஏரியின் சுற்றுச் சுவர் பழுது பார்க்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலத் தலைநகரான ஸ்ரீநகரில் அமைந்துள்ள எழில்மிகு தால் ஏரி மிகவும் புகழ் பெற்றது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்க முதல் தேர்வாக இந்த ஏரி உள்ளது. இங்கு படகு வீடுகள் ஏராளமாக உண்டு. அத்துடன் இந்த ஏரி நகரின் மீன்பிடி தொழிலுக்கு மிகவும் முக்கியமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த ஏரியின் சுர்றுச் சுவர்கள் பல இடங்களில் இடிபாடுடன் காணப்படுகிறது. கோடைக்காலம் ஆரம்பிக்க உள்ளதால் இந்த ஏரிக்கு சுற்றுலாப் பயணிகள் வருவது அதிகரிக்கும். அதை ஒட்டி எரியை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக ஏரியின் சுற்றுச் சுவர் பழுது பார்க்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் வெகு விரைவில் முடிக்கப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.