ஸ்ரீநகர்:
காஷ்மீர் எல்லைப்பகுதியில் உள்ள எல்லைக்கோடு அருகே அமைந்துள்ள பாக். நிலைகள் மீது இந்திய ராணுவத்தினர் அதிரடியாக சரமாரித் தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக எல்லைப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
சமீபகாலமாக பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லைதாண்டி வந்து இந்திய ராணுவ நிலைகள் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கோடு அருகே 500 மீட்டர் தூரத்தில் உள்ள பாகிஸ்தானின் நிலைகள் மீது இந்திய ராணுவத்தினர் ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் குண்டு வீசி அதிரடி தாக்குதல் நடத்தி தகர்த்தனர்.
சமீபகாலமாக பாகிஸ்தான் படையினர் இந்த பகுதிகளில இருந்துதான் காஷ்மீருக்குள் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், இந்திய வீரர்கள் ராக்கெட் குண்டுகளை ஏவி அந்த நிலைகளைத் தகர்த்தெறிந்தனர்.
இந்த தாக்குதல் குறித்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.