புதுக்கோட்டை:
க்களுக்காக போராடுபவர்கள் தீவிரவாதிகள் அல்ல என்கிறார்  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
சீமான் பேட்டி:  கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தப்படி தமிழ்நாட்டு சிறையில் உள்ள சாந்தனை (ராஜிவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளி) இலங்கை சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஜல்லிக்கட்டு மசோதா கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட வேண்டும் என்று கூறினார்.

மேலும் அதிமுக அரசு 1000 மதுபானக்கடைகளை மூடப்போவதாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிப்பது தொடர் கதையாகிறது. தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க முடியது என அந்நாட்டு பிரதமர் ரணில் கூறிவரும் நிலையில் , இந்த பிரச்சினைக்கு தீர்வு காணாமல் இலங்கைக்கு போர்க் கப்பலை இந்தியா வழங்குவது ஏற்படையதல்ல என்றார்
காஷ்மீரில் தீவிரவாதி என புர்கான் வானியை சுட்டுக்கொன்றதை தவறு என்றும் அதை ஏற்க முடியாது. மக்களுக்காக போராடுபவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.