டெல்லி: காசி தமிழ்ச் சங்கமம் பிப்​ரவரி 15ந்தேதி தொடங்குவதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்  தெரிவித்து உள்ளார்.  10 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.  ​காசி தமிழ்ச் சங்​கம் நிகழ்ச்​சியை இந்த ஆண்​டும் பிரதமர் மோடி தொடங்​கு​கிறார். இந்த நிகழ்ச்​சிக்​கும் தமிழக அரசுக்​கும் எந்த தொடர்​பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி​யின் மக்களவை தொகு​தியான வாராணசி​யில் காசி தமிழ்ச் சங்கமம் விழா நடைபெறுகிறது. தமிழர்களுக்கும், காசிக்கும் உள்ள இணைப்பை போற்றும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு தொடங்கப்பட்ட காசி சங்கமம் நிகழ்ச்சி இந்த ஆண்டு 3வது முறையாக தொடர்கறிது. நடப்பாண்டு,  1 மற்றும் 2 நிகழ்ச்​சிகள் கடந்த 2022, 2023-ம் ஆண்டு​களில் சிறப்பாக நடைபெற்றன. அதன் தொடர்ச்​சியாக 3-வது ஆண்டு பிப்​ரவரி 15 முதல் 24 வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வமாக அறிப்பை மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் டெல்​லி​யில்  அறிவித்​தார். இதன் மூலக்​கருத்தாக “அகத்திய முனி” இடம்​பெறு​வார் என்றும் தெரி​வித்​தார்.

பிரதமர் மோடி இந்திய மாநிலங்​களின் கலாச்​சா​ரங்களை இணைக்​கும் பணியை செய்து வருகிறார். இந்த வகையில், காசி​யுடன் தமிழ்​நாட்டுக்கு இருக்​கும் பாரம்​பரியக் கலாச்​சாரத் தொடர்பை மீண்​டும் கொண்டு வர காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்​சியை தொடங்கினார். இந்நிகழ்ச்​சிக்கு வருபவர்கள் அயோத்தி ராமர் கோயில், பிரயாக்​ராஜில் நடைபெறும் மகா கும்​ப மேளாவை காணலாம்.

இந்த முறை காசி தமிழ்ச் சங்கமம் 3.0-ன் மூலக்​கருத்தாக தமிழ் இலக்​கி​யத்தை முதன்​முறையாக எழுதிய மகரிஷி அகத்திய முனி என்று வைக்​கப்​பட்​டுள்​ளது. காசி மற்றும் தமிழ்​நாட்டுக்கு இடையில் சிறந்த இணைப்பாக அகத்​தியர் இருந்​தார். காசி​யில் அகத்​தியர் குண்டம் மற்றும் அகத்திய மகாதேவ் கோயில் அமைந்துள்ளது. இமால​யத்​தில் பிறந்த அகத்​தி​யரிடம் சிவன், தமிழகத்​துக்கு செல்​லும்படி கட்டளையிட்​டதாக நம்பிக்கை உள்ளது. அகத்​தியரிடம்​தான் முருகன் தமிழ் இலக்​கணம் கற்றுக் கொண்​டதாக இதிகாசங்கள் குறிப்​பிடு​கின்றன.

இந்திய சித்த வைத்திய முறையை தோற்று​வித்த அகத்​தி​யரின் பிறந்த டிசம்பர் 19-ம் தேதி “தேசிய சித்த நாள்” என்று கொண்​டாடப்​படு​கிறது. தவிர தமிழ்​நாடு மற்றும் கேரளா​வின் களரி கலையை தோற்று​வித்​தவர், சோழ, பாண்​டியர்​களின் குல குருவாக இருந்​தவர் என்று அகத்​தியர் போற்​றப்​படு​கிறார் .

தமிழ் மற்றும் சம்ஸ்​கிருத மொழிகளில் அகத்​தியர் பல நூல்களை எழுதி​யுள்​ளார். ரிக் வேதத்​தில் சுமார் 300 மந்திரங்​களை​யும் எழுதி​யுள்​ளார். ராமருக்கு அதித்ய ரிதத்தை (போர் நுட்​பம்) அகத்​தியர் போதித்​ததாக கூறப்​படு​கிறது. அகத்​தியர் தம் மனைவி லும்ப ​முத்​ரா​வுடன் நாட்​டின் ஆயிரக்​கணக்​காகக் கோயில்​களில், குறிப்பாக தமிழ்​நாட்​டின் காவிரிக்​கரை​யிலும் வழிபாடு செய்​ததற்கான தகவல்கள் உள்ளன.

அகத்​தியர் வழிபாடு இந்தோனேசியா, ஜாவா, கம்போடியா மற்றும் வியட்​நாமில் இன்றும் வழக்​கத்​தில் உள்ளன. அந்த அளவுக்கு புகழ்​பெற்ற அகத்திய முனி இந்த முறை தமிழ்ச் சங்கமம் 3.0 நிகழ்ச்​சி​யின் மூல ஆதாரமாக இருக்​கிறார்.

கடந்த முறையை போலவே, வாராணசி​யின் கங்கை கரைகளில் ஒன்றான நமோ காட்​டில் இந்நிகழ்ச்​சி​கள் நடைபெற உள்ளன. இந்நிகழ்ச்சி மூலம் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ எனும் கொள்​கை மீண்​டும் பரப்​பப்​படும்.

இவ்வாறு அமைச்சர் தர்மேந் திர பிரதான் தெரி​வித்​தார்.

இந்நிகழ்ச்​சிக்கான வருகை பதிவுகளை தேர்வு செய்​ய​ நேற்று சென்னை ஐஐடி​யின் இணைய தளம் (kasitamil.iit.m.ac.in) தொடங்​கப்​பட்​டுள்​ளது.  இதில், 1,200 பேருடன் ஐஐடி, என்ஐடி மற்றும் மத்தியப் பல்கலைக்​கழகங்​களின் 200 மாணவர்​களும் கலந்து கொள்​கின்​றனர். இந்த 200 பேரும் தமிழகத்தை சேர்ந்​தவர்​கள். இவர்கள் தமிழகத்​தில் இருந்து பிப்​ரவரி 13-ல் புறப்​பட்டு 26-ம் தேதி ​திரும்​பு​கிறார்​கள்.

கும்பமேளா: மூன்றாவது காசி தமிழ் சங்கமம் தேதிகள் மாற்றம்!