டெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில்  வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, மீண்டும் விஜய் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது. அதனப்டி,  விஜய்யை வரும் 19ம் தேதி = ஆஜராக சிபிஐ உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே 12ந்தேதி விசாரணைக்கு ஆஜரான நிலையில், மீண்டும் வரும் 19ந்தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது.

 தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய  நடிகர், 2025ம் ஆண்டு முதல்  தீவிர அரசியலை மேற்கொண்டு வருகிறார். மத்திய, மாநிலஅரசுகளுக்கு எதிராக பணியாற்றி வருகிறார். அதற்காக  தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை அறிவித்த அவர், கரூரில் மக்களைச் சந்திக்கச் சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், முக்கிய நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா, சிடி நிர்மல்குமார் ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்திய நிலையில், விஜய்யை விசாரணைக்கு அழைத்தது.

அதன்படி  விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் ஜனவரி 12ந்தேதி டெல்லி அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். சுமாரி 7மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது. இதையடுத்து, அவர் மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பி  உள்ளது. அதன்படி, வரும் 19ம் தேதி மீண்டும் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு ஆஜராகுமாறு அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று நடந்த விசாரணையில் விஜய்யிடம் கரூரில் விஜய் சென்றிருந்தபோது செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்? காவல்துறையின் செயல்பாடுகள்? கரூர் பரப்புரைக்கு திட்டமிட்ட நேரம் என்ன? கரூர் சம்பவத்திற்கு 7 மணி நேரம் தாமதமாக வந்ததற்கான காரணம் என்ன? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை சிபிஐ முன்வைத்ததாக கூறப்படுகிறது.

சிபிஐ-யின் கேள்விகளுக்கு தவெக தலைவர் விஜய் மிகவும் நிதானமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. சுமார் 7 மணி நேரம் நடந்த இந்த விசாரணையில் விஜய்க்கு ஒரு மணி நேரம் உணவு இடைவேளை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 4 மாதங்களே இருக்கும் நிலையில், அதற்கான பணிகளில் ஒவ்வொரு கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முதல் தலைமுறை வாக்காளர்களை அதிகளவு தன் பக்கம் வைத்துள்ள விஜய், இந்த தேர்தலில் வாக்கு சதவீதத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றே அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

கரூர் சம்பவத்திற்கு பிறகு அதிமுக – பாஜக கூட்டணியில் விஜய் இடம்பிடிப்பார் என்று பலரும் கருதிய நிலையில், அவர் தொடர்ந்து கொள்கை எதிரி பாஜக என்றே குறிப்பிட்டு வருகிறார். இது அதிமுக – பாஜக கூட்டணிக்கு அதிருப்தியை உருவாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவருக்கு சிபிஐ மூலமாக அழுத்தம் தரப்படுவதாகவும் பலரும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.

ஜனநாயகன் படம் குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் ஆகாதது, சிபிஐ விசாரணை வளையத்திற்குள் விஜய் போன்ற பல்வேறு நெருக்கடியில் தவெக சிக்கியிருந்தாலும், விஜய்க்கு அரசியல் ரீதியாக மக்கள் மத்தியில் அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ளது

. இது தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் கருதப்படுகிறது. கரூர் விவகாரத்தை விஜய்யும், தவெக-வும் கையாண்ட விதம் மக்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கிய நிலையில், தற்போதைய சூழல் அவர் மீது அனுதாபத்தை அதிகரித்து வருகிறது.

[youtube-feed feed=1]