சென்னை
அதிமுக அணி விவகாரத்தில் நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை என நடிகர் கருணாஸ் தெரிவித்தார்.
சமீபத்தில் சசிகலா – ஓபிஎஸ் என இரு அணியாக அதிமுக பிரிந்த பின் எம் எல் ஏக்களுக்கு சசிகலா தரப்பில் கோடிக்கணக்கில் பணம் தரப்பட்டதாக செய்தி வந்தது.
இதில் நடிகரும் திருபுவனம் தொகுதியின் தற்போதைய எம் எல் ஏவும் ஆன கருணாஸ் க்கு ரூ 10 கோடி தரப்பட்டதாக நேற்று ஒரு தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெற்கு மதுரை எம் எல் ஏ சரவணன் கூறியுள்ளார்.
இதை நடிகர் கருணாஸ் மறுத்து ஒரு அறிக்கை வெளியுட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவிப்பது :
” நான் எனது நண்பரின் விடுதியில் கூவத்தூரில் தங்கி இருந்தேன்
அங்கு எம் எல் ஏக்கள் கூட்டம் நடைபெற்றதால் அவர்களுடன் கலந்துக் கொண்டேன்.
குடிநீர் பஞ்சம் நிலவுவதால் எனது தொகுதி கண்மாய்களில் தூர் வாரவேண்டும்,
மற்றும் பல மேம்பாட்டுப் பணிகள் உள்ளன
அதையொட்டி நான் எனது தொகுதி மேம்பாட்டுக்கு நிதி வழங்குமாறு கேட்டுள்ளேன்.
இதை தவிர நான் என் சொந்தத் தேவைக்கோ, அல்லது என் அமைப்பின் தேவைக்கோ சல்லிக் காசு கூட கேட்கவும் மாட்டேன், வாங்கவும் மாட்டேன்.
ஆனால் என் மேல் பணம் வாங்கியதாக ஒரு அபாண்ட குற்றச்சாட்டை எம். எல். ஏ. சரவணன் சுமத்தியுள்ளார்.
நான் விரைவில் இதற்காக சரவணன் மேல் மானநஷ்ட வழக்கு தொடரப்போகிறேன்”
இவ்வாறு கருணாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.