சென்னை

திமுக தற்போது அமைத்துள்ள கூட்டணி ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு எதிரானது என சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸ் கூறி உள்ளார்.

நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் அதிமுக உடன் பாமக மற்றும் பாஜக இடையில் கூட்டணி உருவாகி உள்ளது. இந்த கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. எந்தெந்த தொகுதிகள் என இன்னும் அறிவிக்கப்படவில்லை.

அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளவர் நடிகர் கருணாஸ். இவர் இந்த கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த கூட்டணி குறித்து கருணாஸ் மிகவும் காட்டமாக பேட்டி அளித்துள்ளார்.

நடிகர் கருணாஸ், “இந்த கூட்டணி ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு எதிரான கூட்டணி. இது ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. ஜெயலலிதா ஏற்கனவே பாமகவுடனோ பாஜகவுடனோ கூட்டணி அமைக்காத போது அதிமுக தற்போது இவ்வாறு கூட்டணி அமைத்துள்ள்து.

இது கட்சி தொண்டர்களுக்கும் எதிரானது.    நான் தற்போது அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்று சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கிறேன். அதனால் என்னால் அதிமுகவை எதிர்த்து பிரசாரம் செய்ய முடியாது. இதில் பல சட்ட சிக்கல்கள் உள்ளன’ என தெரிவித்துள்ளார்”