சென்னை:
நடிகர் விக்ரமனின் மகளுக்கும், திமுக தலைவர் கருணாதியின் கொள்ளு பேரனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து – சிவகாம சுந்தரியின் மகள் வழிப் பேரனும், கெவின்கேர் சி.கே. ரங்கநாதன்- தேன்மொழி தம்பதியரின் மகனுமான ரஞ்சித்-க்கும், நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கும் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

மணமகன் மனுரஞ்சித் திமுக தலைவர் கருணாநிதியின் கொள்ளுப் பேரனாவார். இந்த நிச்சயதார்த்தத்தின் மூலம் நடிகர் விக்ரம் கருணாநிதி குடும்பத்தில் சம்பந்தி ஆகிறார். விக்ரமுக்கு. துருவ் என்கிற மற்றொரு மகனும் உள்ளார்.

திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள பிரபல ஓட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் விக்ரமின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் கருணாநிதியின் முக்கிய சொந்தங்கள், சி.கே. ரங்கநாதனின் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டார்கள்.

இயக்குநர் ஷங்கர், நடிகர் உதயநிதி ஸ்டாலின் போன்ற திரையுலக பிரபலங்களும் கலந்துகொண்டனர்.
Patrikai.com official YouTube Channel